தேவையென்றால் விளையாட நான் ரெடி – மாலிங்கவின் மனம் மாறுகிறது?

(FASTGOSSIP | COLOMBO) – இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு எனது சேவை தொடர்ந்தும் தேவைப்படின் தான் இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் அறியபப்டுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 26ம் திகதி கொழும்பு.ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது போட்டியின் பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma