உயர்தரப் பரீட்சையின் அனுமதி அட்டைகள் இன்று முதல் இணையத்தளத்தின் மூலம்

(FASTNEWS|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் அனுமதி அட்டை இதுவரை கிடைக்கப்பெறாத தனியார் பரீட்சார்த்திகளுக்கு, இன்று(24) முதல் இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் அனுமதி அட்டைகளைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என, பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.