மதுபோதையில் வாகனம் செலுத்திய 201 சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(23) காலை 06 மணி முதல் இன்று(24) காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 201 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 5ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்படும் குறித்த இந்த விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இதுவரை 5042 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.