மதூஷ் மற்றும் கஞ்சிப்பானி இம்ரானின் நெருக்கமான சகா CCD இனால் கைது

(FASTNEWS | COLOMBO) – அழுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருணளு பகுதியில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது நபர் ஒருவர் நேற்று(23) காலை 10.40 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாகந்துர மதூஷ் மற்றும் கஞ்சிப்பானி இம்ரான் ஆகியவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான் தர்காநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சஞ்சீவ புஷ்பகுமார, கொலை சம்பவங்களுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.