(FASTGOSSIP|COLOMBO) – பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், தற்போது தனது மகள் நிகிதாவை காப்பான் படத்தில் பாடகியாக அறிமுகமாக்கியிருக்கிறார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்தப் படத்தில் ‘விண்ணில் விண்மீன்’ என்ற பாடலை படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா பாடியுள்ளார்.
காப்பான் படத்தில் சூர்யாவுடன், மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.