(FASTNEWS|COLOMBO) – சூரியவெவ பகுதியில் உள்ள விவசாய சேவை நிலையத்திற்கு அருகாமையில் இராணுவ வீரர்களின் கன ரக வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் கன ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், குறித்த கன ரக வாகனத்தில் 13 இராணுவ வீரர்கள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.