தெரிவுக் குழுவுக்கு இன்று எம்.ஆர். லதீப், இலங்கக்கோன் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பு

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் இன்று(25) பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லதீப், முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் மற்றும் முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமாந்த ஆகியோர் சாட்சி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுவானது இன்று(25) முற்பகல் 10.00 மணியளவில் மீண்டும் கூடவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.