(FASTNEWS|COLOMBO) – நேற்று(24) காலை 6.00 மணி முதல் இன்று(25) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்திற்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 220 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, கடந்த 03 வாரங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 5,262 சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.