கொழும்பு – கண்டி வீதியில் வாகன போக்குவரத்து மட்டு

(FASTNEWS|COLOMBO) – கொழும்பு கண்டி பிரதான வீதியில் ரங்வெல சந்தியிலிருந்து மீபிட்டி சந்தி வரையில் எதிர்வரும் 27ஆம் திகதி இரவு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் ரங்வலியில் மாற்று பாதையின் ஊடாக மீபிட்டி வரையில் பயணித்து பிரதான வீதியில் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு வரையில் பயணிக்கும் வாகனங்கள் மீபிட்டி மாற்று வீதி ஊடாக சென்று பிரதான வீதிக்கு செல்ல முடியும்.

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவல்தெனிய கஜமா விகாரையில் வருடாந்த பெரஹெராவை முன்னிட்டு இவ்வாறு கண்டி கொழும்பு வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.