14 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(FASTNEWS | COLOMBO) – திருத்தப்பணிகள் காரணமாக இன்று(25) இரவு 08.00 மணியில் இருந்து நாளை(26) காலை 10.00 மணி வரைக்கும் 14 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொலன்னாவை நகர சபை, ராஜகிரிய,மொரகஸ்முல்லை, ஏதுல் கோட்டே, ஒபேசேகரபுற, பண்டாரநாயக்க புற, நாவல மற்றும் ராஜகிரிய இலிருந்து நாவலை திறந்த பல்கலைக்கழகம் வரையிலான வீதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.