(FASTNEWS | COLOMBO) – குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி சியாப்தீனுக்கு பிணையில் செல்ல இன்று(25) குருநாகல் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
அவரை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், 25 லட்சம் பெறுமதியான நான்கு சரீர பிணையிலும் விடுவிக்குமாறு குருநாகல் பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.