(FASTNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும், மேலும் சில கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(26) கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஜரமாவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று காலை கைச்சாத்திடப்படவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் திலம் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயல்பட்ட அரசியல் கட்சிகளும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளுமே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட உள்ளன.