ஐந்தாவது சதத்தை பெற்ற குசல் – பங்களாதேஷ் அணிக்கு 315 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்

(FASTNEWS|COLOMBO) – பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் குசல் பெரேராவின் சதத்துடன் இலங்கை அணி 314 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி குசல் பெரேரா 111 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் 48 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

குசல் ஜனித் பெரேரா சர்வதேச போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.