நான் கூறிய விடயங்களுக்கு செவிசாய்க்காவிடின் விலகிக்கொள்வேன் – லசித் மாலிங்க

(FASTNEWS|COLOMBO) – இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், T20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக செயற்படுமாறு இலங்கை கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்டிருப்பதாக லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளிலிருந்து விடைபெற்றுள்ள லசித் மாலிங்க தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும், T20 போட்டிகளில் விளையாடுவது குறித்தும் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

என்னுடன் கலந்துரையாடிய கிரிக்கெட் சபை அதிகாரிகள் இப்போது என்னிடம் இருக்கும் T20 போட்டிகளுக்கான தலைவர் பதவியை தொடர்ந்தும் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டனர் எனவும்  இலங்கை T20 அணியின் தலைவராக தொடர்ச்சியாக செயற்படும் பட்சத்தில், அதற்கான திட்டமிடல் ஒன்றை மேற்கொண்டு கிரிக்கெட் சபையிடம் கலந்துரையாடவுள்ளதாகவும், மாலிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனது எதிர்பார்ப்பு பயிற்றுவிப்புகள் எப்படி மேற்கொள்ள வேண்டும், எப்படியான வீரர்கள் T20 அணிக்கு தேவை என்பதுதான். அதனால், நான் தேர்வுக்குழுவுடன் அமர்ந்தவுடன், T20 போட்டிகளுக்கான சிறந்த 20 அல்லது 25 வீரர்களை அணிக்குள் உள்வாங்க வேண்டும் என அவர்களிடமிருந்து என்ன தேவை என்பதை குறிப்பிட்டு அதற்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்வேன்”

இப்படி நான் கேட்கும் விடயங்களுக்கு கிரிக்கெட் சபை, செவிசாய்க்குமானால் அணித்தலைவராக செயற்படுவேன். இல்லையென்றால், விலகிக்கொள்வேன் என்று லசித் மாலிங்க குறிப்பிட்டுள்ளார்