(FASTNEWS|COLOMBO ) – குவைட் நாட்டிற்கு பணி பெண்களாக சென்ற இலங்கை பெண்கள் 57 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை வந்தடைந்த குறித்த பணிப்பெண்களில் 7 பேர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அதில் 3 பேர் கடுமையான நோய்வாய்ப்பட்ட நிலையிலும் ஒருவர் வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்ட நிலையில் நடக்கமுடியாத நிலையில் சக்கர நாற்காலியிலும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.