(FASTGOSSIP| COLOMBO) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீமின் வீட்டிலிருந்த 60 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸில் நேற்றிரவு (28) ரவூப் ஹக்கிமின் மனைவி சானாஸ் ஹக்கீமினால் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
இந்நிலையில், கொழும்பு மத்திய பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்சா மின் ஆலோசனைக்கு அமைய கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யின் கீழ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.