பாணந்துறை இராணுவ துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் உயிரிழப்பு

(FASTNEWS | COLOMBO) – பொலிஸாரின் கட்டளையை கவனத்திற் கொள்ளாது பயணித்த வேன் ஒன்றின் மீது நேற்றிரவு(29) பாணந்துறை, பின்னவத்த பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய பலங்கொடயை வசிப்பிடமாகக் கொண்ட போதாகொடகே பிரியந்த என இனங்காணப்பட்டுள்ளார்.

அத்துடன் தப்பிச் சென்று சந்தேகநபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பாணந்துறை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.