பொலன்னறுவையில் விவசாயிகள் இருவர் படுகொலை

பொலன்னறுவை – மெதிரிகிரியவில் விவசாயிகள் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மற்றுமொரு விவசாயியே கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வயல்களுக்கு நீரை திருப்பி விடுவது தொடர்பில் ஏற்பட்ட மோதலே கொலைக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை மெதிரிகிரிய பொலிஸார் தற்போது கைதுசெய்துள்ளனர்.

அம்பகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.