துமிந்த திசாநாயக்க இன்று(30) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க இன்று(30) அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 மில்லியன் ரூபா மாத வாடகையின் கீழ் ராஜகிரிய பகுதியில் தனியார் கட்டிடமொன்றில் விவசாய அமைச்சினை நடத்திச் சென்றமை தொடர்பில் விவசாயத் துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக கரந்தெனிய சமூக நல அமைப்பினால் வழங்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.