மது போதையில் வாகனம் செலுத்திய 6,315 சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(29) காலை 6.00 மணி முதல் இன்று(30) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்தில் மது போதையிலிருந்த 179 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த 05 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 6,315 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.