மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் 18 ஆம் திகதி அறிமுகப் படுத்த தீர்மானம்

(FASTNEWS|COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 18 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெறும் கூட்டத்தின் போது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என, மக்கள் விடுதலை முன்னணியின்செயலாளர் டில்வின் சில்வா தேசிய மக்கள் சக்தி அமைப்பினரால் கொழும்பில் இன்று(30) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.