மாற்று மதத்தவர்களிடம் முஸ்லிம்களின் நேர்மைத் தண்மையினை குழி தோண்டிப் புதைத்த முஸ்லிம் காங்கிரஸ்

12.08.2015 ஆம் திகதி மன்னாரில் நடந்த முஸ்லிம் காங்கிரஸ் எழுச்சிமாநாட்டிற்கு பல இடங்களில் (வெலி ஓயா, யக்காவெவ, அடம்பன், மதவாச்சி, ஆணவிழுந்தாவ, கருங்கண்டல்)

இருந்து பணம் மற்றும் சாப்பாட்டுப் பார்சல் தருவதாக வாக்குறுதியளித்து பஸ்களில் அழைத்து வரப்பட்ட மாற்று மதத்தவர்களை கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் பணம் கொடுக்காமல் (சாப்பாடு மட்டும் கொடுத்துளளனர்) ஏமாற்றி விட்டு கூட்டி வந்த பஸ்ஸிலும் கொண்டு செல்லாமல் நிர்க்கதியாக விட்டு விட்டு சென்றுள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்ட மாற்றுமதத்தவர்கள் முஸ்லிம்களைப் பற்றி ஏமாற்றுக்காரா்கள், மோசடியாளர்கள், வாக்குறு நிறைவேற்றாதவர்கள் என்று பல மோசமான வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டு திரிந்ததை மன்னாரில் பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது.

இச்சம்பவத்தினால் பல இடங்களில் மன்னார் முஸ்லிம்களுக்கு பாரியதொரு தலைகுணிவு ஏற்பட்டது.

இவ்வாறான ஒரு அவமானம் எங்களுக்குத் தேவையா இவ்வளவு நாளும் முஸ்லிம்களை ஏமாற்றித் திரிந்த முஸ்லிம் காங்கிரசார் இப்பொழுது மாற்று மதத்தவர்களையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் வங்குரோத்துத்தணத்தை என்னவென்று சொல்வது.

தயவு செய்து பணிவாகக் கேட்டுக் கொள்கின்றோம் முஸ்லிம்களின் மானத்தை மாற்று மதத்தவரிடம் அடகு வைக்காதீர்கள்.

 

11218704_878036715585031_6533701180771228792_n 11870731_878036052251764_5898910797439620253_n (1) 11870731_878036052251764_5898910797439620253_n