இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(FASTNEWS|COLOMBO) – நாடளாவிய ரீதியில் இன்று(31) முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் அடங்கலாக 40 சுகாதார வைத்திய பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறும் பரீட்சை நிலையங்கள் மற்றும் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களில் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை புகை விசிறுதல் மற்றும் பாடசாலைகளை சோதனை செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.