(FASTNEWS | COLOMBO) – பொலிஸாரின் கட்டளையை கவனத்திற் கொள்ளாது பயணித்த வேன் மீது பாணந்துறை, பின்னவத்த பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியானவர் கொஸ்கொட தாரக எனும் பெயரில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரின் நெருங்கிய சகா என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய போதாகொடகே பிரியந்த என்பவராவார். குறித்த சந்தேக நபர் மிரிஹான பிரதேசத்தில் வங்கிக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
பொலிஸாரின் கட்டளையை கவனத்திற் கொள்ளாது பயணித்த வேனை நிறுத்த கட்டளை இட்ட இராணுவத்தினர் இருவரை முட்டி தப்பிச் செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் கடந்த 29ம் திகதி இராவத்தினரால் குறித்த வேன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.