நாடளாவிய ரீதியில் 6,479 சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) நேற்று(30) காலை 6.00 மணி முதல் இன்று(31) மாலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 164 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்யும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த 05 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மது போதையிலிருந்த 6,479 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.