
மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி
(FASTNEWS|COLOMBO)- தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் சில மரக்கறிகளின் விலைகளுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
பீக்கங்காய், வட்டக்காய், கெக்கரிக்காய், புடலங்காய், மற்றும் பாகற்காய் ஆகிய மரக்கறிகளின் மொத்த விலையானது 10 முதல் 30 ரூபா அளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.