நியூசிலாந்து – இலங்கை போட்டிகளுக்கான புதிய கால அட்டவணை

(FASTGOSSIP|COLOMBO) – நியூசிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போட்டி அட்டவணையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று(01) ஆஷஸ் தொடருடன் ஆரம்பிக்கப்பட்ட ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாகவே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முதல் இரு டி-20 போட்டிகளும் ஆர். பிரேமதாச மைதானத்தில் இருந்து மாற்றப்பட்டு மூன்று டி-20 போட்டிகளும் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

புதிய அட்டவணையின்படி முதல் இரு போட்டிகளும் தற்போது செப்டெம்பர் 01 மற்றும் 03 ஆம் திகதிகளுக்கு மாற்றப்பட்டிருப்பதோடு 3ஆவது டி-20 போட்டி மாற்றமின்றி செப்டெம்பர் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

புதிய அட்டவணையின்படி:
ஆகஸ்ட் 8 – 10 – மூன்று நாள் போட்டி – மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானம், கட்டுநாயக்க
ஆகஸ்ட் 14 – 18 – முதலாவது டெஸ்ட் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம்
ஆகஸ்ட் 22 – 26 – இரண்டாவது டெஸ்ட் – பீ. சரா ஓவல், கொழும்பு
ஆகஸ்ட் 29 – முதலாவது டி-20 போட்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி
செப்டெம்பர் 3 – இரண்டாவது டி-20 போட்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி
செப்டெம்பர் 6 – மூன்றாவது டி-20 போட்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி