தேர்தல் ஆணையாளரிடம் இருந்து முகநூல் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

2015.08.17 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் 2015.08.14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றது

அதனைத் தொடர்ந்து 15, 16 ஆம் திகதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே, தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை எனக்கு (ஆணையாளருக்கு), பொலிசாருக்கு தெரியப்படுத்துவது அல்லாமல் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் குறித்ததொரு வேட்பாளர்/ கட்சி/ குழு விளம்பரமாகும் விதமாகவோ அபகீர்த்தியேற்படும் விதமாகவோ நடந்துகொள்ள வேண்டாம் என அனைவரிடமும் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஆர்வம் காட்டும் நல்ல பிரஜைகளான உங்கள் ஒத்துழைப்பு தேர்தல் திணைக்களத்திற்கு கிடைக்கும் என உறுதியாக நம்புகின்றேன்.