ஹகீம், கூட்டமைப்புடன் கலந்துரையாடல்

(FASTGOSSIP| COLOMBO) – கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை சகல அதிகாரங்களும் கொண்டதாக உருவாக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.