மைத்திரியுடன் கைகோர்க்க சஜித் தயார்

(FASTGOSSIP | COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளிடையே அதிர்வலைகள் எழுந்த வண்ணமுள்ளன.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு ஆதரவான கட்சிகளை இணைத்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. புதிதாக உருவாக்கப்படவுள்ள முன்னணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இது குறித்து கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(01) அலரிமாளிகையில் சுமார் 45 நிமிடங்கள் கரு ஜயசூரியவோடு பேசியதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில்,
கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டுமென கட்சிக்குள் அழுத்தங்கள் அதிகரித்த வண்ணமுள்ளன எனலாம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதனை விரும்புகிறார். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவாரென ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்த கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, கட்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் வேறொரு அணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அவ்வாறு இருக்க கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் சஜித் பிரேமதாச மைத்திரிபால சிறிசேனவின் யோனையை ஏற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.