கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை

(FASTNEWS|COLOMBO) – வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் தாழ் அமுக்க நிலை ஏற்பட்டுள்ளமையினால் கடல் தொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைப்பதற்காக கடல் தொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தி பாதுகாப்பு வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கடல் தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப்வெதஆராய்ச்சி கடல் தொழில் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் சில தினங்களில் தெடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு அனைத்து கடல் தொழிலாளர்கள் மற்றும் கடல் தொழிலில் ஈடுபடுவோரிடம் கடல் தொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் எதிர்வரும் சில தினங்களில் வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அடிக்கடி 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் கடல் பிரதேசம் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.