அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல் நேற்று13.08.2015 சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியஅமைப்பாளரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்த இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடலில் முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி சேகு இஸ்ஸதீன், மெளலவி நதீர் உட்பட பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.