(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கு கட்சிகள் தங்களின் வேட்பாளரை தீர்மானத்தின் பின்னர், வேட்பாளரினதும், கட்சிகளினதும் கொள்கைகளினதும் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று(04) இடம்பெற்ற போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த, கட்சித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.