(FASTGOSSIP | COLOMBO) – மீரிகம பாந்துராகொட பிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்திய பதினொரு பேர் தற்போதைக்கு பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாந்துராகொட பிரதேசத்தின் கள்ளச்சாராய உற்பத்தியாளர் ஒருவரிடம் கசிப்பு எனும் கள்ளச்சாராயத்தை அருந்திய பெருந்தொகையானோர் திடீர் சுகவீனமுற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று(04) மாலை அவர்களில் பதினொரு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருபது பேர் மருத்துவமனைகளில் தங்கியிருந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்ற தாகவும் கூறப்படுகின்றது.
குறித்த வர்த்தகரிடம் கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கும் வாந்திபேதி, கண்களில் எரிச்சல், கண் பார்வை பறிபோதல் போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே பெருந்தொகையானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடற்கூறுகள் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது.