(FASTGOSSIP | COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச முன்னிறுத்தப்படாதவிடத்து தமது ஆதரவு தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாட முஸ்லிம் காங்கிரஸ் அவதானம் செலுத்தியுள்ளதாக சிங்கள மொழி மூல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிட்டால் எமது முழுமையான ஆதரவினை வழங்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக குறித்த கட்சியின் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க தலைமையினை தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளின் போது ஒழுங்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமை, நிலவும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றினை கருத்துத் கொண்டு முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரை ஏற்காதவிடத்து பிறிதொருவருக்கு தலைமை வழங்கப்படின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பலம் பொருந்திய கட்சியுடன் இணைய கூடிய அவதானம் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.