மடவளை முஸ்லிம் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

(FASTGOSSIP | COLOMBO) – முஸ்லிம் மக்கள் கொண்டாடவுள்ள புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு கடந்த காலங்களில் குர்பான் கொடுக்க  மாடு அறுப்பதற்கான அனுமதியை பிரதேச செயலகத்தில்  பெற்றுக் கொண்ட முறையில் இம்முறை கூடுதலானதொரு மாற்றத்தை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி புதிய நடைமுறையின் படி; மாட்டின் வயதை உறுதிசெய்யும் “பற்றுச்சீட்டுடன்” பிரதேச செயலகத்திற்குச் சென்று மாட்டை அறுப்பதற்குறிய விண்ணப்ப பத்திரத்தை பெற்று பூர்த்தி செய்துஅதனை வத்தேகம சுகாதார பரிசோதகர் காரியாலயத்தில் (MOH) உறுதிசெய்து, திரும்பவும் பிரதேச செயலகத்தில் ஒப்படைத்து அங்கே அறுப்பதற்கான “அனுமதிப்பத்திரத்தை” பெற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே கடைசி நேரத்தில் அழைக்கழிவதை தவிர்ந்து கொள்ள குர்பானி கொடுக்க இருப்பவர்கள் இப்போதே அவசரமாக தமது அனுமதிகளை பெற்றுக்கொள்ளவும்.

அவ்வாறே ஆட்டுக்கும் அனுமதி பெறவேண்டும். மேலும், வத்தேகம சுகாதார பரிசோதகர் காரியாலயத்தினால் (அறுப்பதற்கான) அனுமதியை உறுதி செய்த  இடங்களைத் தேடி எதிர்வரும் 11ஆம் திகதியளவில் (PHI) வருகை தந்து உரிய முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிப்பார்கள் என்ற செய்தியும்  கிடைத்துள்ளது.

மேலும் அறுக்கும் இடங்களை சுகாதாரமான முறையில் இரத்தம், கழிவுகளுக்காக வெவ்வேறான குழிகளை தோண்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். எனவே இவற்றை கருத்தில் கொண்டு நாட்டு சட்டத்தை மீறாது எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி உரிய நடைமுறைகளை பின்பற்றி எமது அறுத்துப்பலியிடும் மார்க்க செயல்பாட்டை நிறைவேற்றிக் கொள்ளவும்.

சுல்பி சமீன்