(FASTNEWS | COLOMBO) – ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளதோடு, ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தொடர்பான விவகாரம் மற்றும் அம்மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற மிகபெரிய கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இதையடுத்து இது தொடர்பாக சற்று முன்னர் மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.