(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான அறிக்கையை தயார் செய்ய முடியும் என, எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.