ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் இன்று(05) மாலை

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் இன்று(05) அலரி மாளிகையில் பிற்பகல் 4.30 அளவில் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, புதிய கூட்டணிக்கான யாப்பு குறித்து ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது