முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

(FASTGOSSIP|COLOMBO) – ‘பிகில்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கும் பிகில் படத்தில் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் விஜய் நடித்து வருகிறார். நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, கதிர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சொந்த குரலில் ஒரு பாடலை பாடி உள்ளார். இதுபோல் ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடி இருக்கிறார்.

இந்த பாடலில் விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு காட்சியில் நடிக்க உள்ளார். பல்வேறு இசை ஆல்பங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் தோன்றினாலும், படங்களில் இதுவரை நடிக்கவில்லை. இப்போது முதல் தடவையாக பிகில் படத்தில் நடிக்கிறார்.