மீண்டும் ஒன்று கூடவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு

(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மீண்டும் ஒன்று கூடவுள்ளதாக அதன் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அது தொடர்பான உரிய தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றுக் கூடலின் போது, பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விஷேட விசாரணை குழுவின் உறுப்பினர்கள் சாட்சி வழங்கவுள்ளனர்.

அதன் தலைவர் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொடவிற்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சின் செயலார் பத்மசிறி ஜயமான்ன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்கக்கோன் ஆகியோர் சாட்சி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.