(FASTNEWS|COLOMBO) – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி கயானாவில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு 147 ஓட்டங்கள் வெற்றி இலக்காக மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்தது.
இந்திய அணி 19.1 வது ஓவரில் 150 ரன்கள் எடுத்து தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 19.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்கள் பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் தொடரையும் முழுமையாக வென்றது.