(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கைப்பற்றப்பட்ட வாள் கத்தி மற்றும் ஆயுதங்களை மீளவும் முஸ்லிம் பள்ளிகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் வெல்லம்பட பிரிவு பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் மக்களின் சம்பிரதாயமான மாடு பலியிடலுக்காக வெல்லம்பட பள்ளியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.