(FASTGOSSIP | COLOMBO) – இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரதிய ஜனதா கட்சியின், மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் உடல்நிலை நலிவுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் நேற்று(06) அவர் மாரடைப்பினால் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மரியாதை செலுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



