(FASTNEWS | COLOMBO) – இலங்கையில் தூண்கள் மீது பயணிக்கும் ரயில் சேவையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர் டிலான் பெர்னாண்டோ நேற்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
அதன்படி, மருதானையில் இருந்து நுகேகொட வரையான பகுதிக்கு முதற்கட்டாக தூண்கள் மீது பயணிக்கும் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர் டிலான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.