(FASTNEWS|COLOMBO) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, இன்று(07) மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
பாடப் புத்தகங்களில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் நிழற்படங்களை அச்சிட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய, கல்வி அமைச்சின் வௌியீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளரான I.M.K.B இலங்கசிங்கவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.