ருகுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்கள் விளக்கமறியலில்

(FASTNEWS|COLOMBO) – ருகுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடாதிபதியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், ருகுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான எலியகந்த மாணவர் விடுதியில் சில புதிய மாணவர்கள் பகிடிவதைக்கு உள்ளாக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, அங்கு முன்னறிவித்தலின்றி திடீர் தேடுதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே, ருகுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடாதிபதிக்கு மாணவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.