(FASTGOSSIP|COLOMBO) – புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெற்றிபெற்ற படம் விக்ரம் வேதா. பொலிஸ் அதிகாரியாக மாதவன், தாதாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தனர்.
விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தை அமிர்கான் ஏற்க மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் சொஹிப் அலிகான் நடிக்கிறார்.
தமிழில் இப்படத்தை இயக்கிய புஷ்கர், காயத்ரி ஆகியோரே இந்தி ரீமேக்கையும் இயக்குகின்றனர். நீரஜ் பாண்டே தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2020ம் ஆண்டில்தான் ஆரம்பமாகவுள்ளது