(FASTNEWS|COLOMBO) – சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், பாராளுமன்றம் இன்று (08) காலை 10.30 மணிக்குக் கூடவுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைககள் இன்று நடைபெறவுள்ளதால், இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஒத்திவைப்புவேளை விவாதத்தை நாளை(09) வரை ஒத்திவைப்பதற்கு எதிர்க்கட்சி சார்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஏனைய கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்தமையால், நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த காரணிகள் குறித்து இன்றைய அமர்வில் விவாதங்கள் இடம்பெறவுள்ளன.