சில பகுதிகளில் மின் விநியோகம் தடை

(FASTNEWS|COLOMBO) – பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 

தெஹிவளை, மாலபே, ஹோமாகம, கொஸ்கம, புத்தளம், நிக்கவரெட்டிய மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதிகளில் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.